குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் போராட்டம் நடைபெற்றது.
இது குறித்து குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியில் மாவட்டச் செயலாளர் அந்தோணி முத்து கூறுகையில், "தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் அரசின் பரிசுப் பொருள்கள் வாங்குவதற்காக வந்த மக்களில் பெரும்பாலானோருக்குப் பரிசுப் பொருள்கள் கிடைக்கவில்லை.
பொங்கல் பரிசு கொடுக்காமல் தொழிலாளர்களைத் தகாத வார்த்தையில் பேசி விரட்டியதாகத் தெரிகிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அதே நேரத்தில் ரேஷன் கார்டில் என்.பி.எச்.எச். ரத்துசெய்ய வேண்டும். நல வாரியத்தில் பதிவுபெற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசு கண்டிப்பாக வழங்க வேண்டும்" என்றார்.
ரேஷன் அட்டைகளில் என்.பி.எச்.எச். முறையை ரத்து செய்யக் கோரி குமரியில் போராட்டம்!
கன்னியாகுமரி: நியாயவிலைக் கடை அட்டையில் என்.பி.எச்.எச். முறையை ரத்துசெய்ய வலியுறுத்தி குமரியில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் போராட்டம் நடைபெற்றது.