கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சி.எம். பால்ராஜ் தலைமையில் புதுக்கடை பேருந்து நிலையத்தில் பேரூராட்சி அலுவலகம் முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசமூடு சாரத்துசாலையின் மேம்பாட்டு நிதிக்காக ஒதுக்கபட்ட 50 லட்சம் ரூபாயில், 25 லட்சம் ரூபாய் தரத்தில் மட்டுமே பணிகள் நடைபெற்றதாகவும் சாலை பராமரிப்பு பணியில் ஊழல் முறைகேடுகள் நடந்ததாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், இதற்கு காரணமாக இருந்த செயல் அலுவலர், பொறியாளர் மீது மாவட்ட நிர்வாகமும், லஞ்ச ஒழிப்புத்துறையும் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'மத்திய அரசு நடிகர்களை பயமுறுத்துகிறது' - நல்லகண்ணு