ETV Bharat / state

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

author img

By

Published : Oct 28, 2020, 1:45 PM IST

கன்னியாகுமரி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பலூன் பறக்கவிட்டு போராட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா சிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பலூன் பறக்கவிட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "தமிழ்நாட்டில் ஏழை எளிய பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக வெங்காயத்தின் விலை சமீப நாட்களாக உச்சத்தை தொட்டுள்ளது.

ஆனால் இதனை அரசுகள் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இதையும் படிங்க: திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.