கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் களியல் முதல் பணக்குடி வரை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயத்தை ஒட்டியுள்ள 15 கி.மீ., வரை உள்ள, 17 கிராமங்களைச் சூழியல் அதிர்வு தாங்கு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இம்மாவட்டத்தில் அமையவிருக்கும் சூழியல் அதிர்வு தாங்கு மண்டலம் திட்டத்தால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஆதலால், இத்திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சூழியல் அதிர்வு தாங்கு மண்டலம் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது. இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ”குமரி மாவட்டத்தில் அமையவிருக்கும் சூழியல் அதிர்வு தாங்கு மண்டலத்தால் மாவட்ட மக்களின் வாழ்வுரிமை முற்றிலுமாக பாதிக்கப்படும். எனவே, இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இதை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது” என்றனர்.
இதையும் படிங்க:சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு மக்கள் கோலமிட்டு எதிர்ப்பு!