கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் இன்று (அக்.12) ரயில் மோதி குழித்துறை அருகே பாகோடு, கோவில்வட்டம் பகுதியை சேர்ந்த சசி (44) என்ற நபர் உயிரிழந்து ரயில் நிலைய தண்டவாளத்தில் கிடந்துள்ளார்.
இந்த நிலையில் சடலத்தை அப்புறப்படுத்த நாகர்கோவிலில் இருந்து ரயில்வே காவல்துறையினர் வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ரயில்வே பணியாளர்களை ஏற்றிவரும் சிறப்பு ரயில் குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
நாகர்கோவிலில் இருந்து ரயில்வே காவல்துறையினர் வந்து சடலத்தை மாற்றிய பிறகு ஒரு மணி நேரத்துக்கு பின் தாமதமாக பணியாளர்களை ஏற்றிவந்த இந்த சிறப்பு ரயில் சென்றது.
கட்டட மேஸ்திரியாக பணிபுரிந்துவந்த சசியின் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க...செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தைக் கடக்க முயற்சி; ரயில் மோதி மாணவர் உயிரிழப்பு