கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியைச் சேர்ந்த ஆலன் ஜோஸ் என்பவர் தனது குடும்பத்தினருடன் சொகுசு காரில் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு சென்றார்.
நாகர்கோவில் அருகே தோட்டியோடு பகுதியை கடக்கும்போது எதிரே வந்த டெம்போ மீது எதிர்பாராதவிதமாக சொகுசு கார் மோதியது.
இதனால் ஏற்பட்ட விபத்தில் ஆலன் ஜோசின் 4 மாத குழந்தை ஆட்லின் ரியா சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.
மேலும், சொகுசு காரில் இருந்த ஓட்டுநர் உள்பட 9 பேர் படுகாயமடைந்த நிலையில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக சொகுசு கார் ஓட்டுநர் ஆபிரகாம் ஜெபசிங் மீது இரணியல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.