ETV Bharat / state

ஊருக்குள் புகுந்து சிறுத்தை அட்டகாசம் - பொதுமக்கள் அச்சம்! - சிறுத்தை

குமரி: மேற்குத் தொடர்ச்சி அருகே அமைந்துள்ள ஆரல்வாய்மொழி கிராமத்திற்குள் புகுந்து ஆடுகளை கொல்லும் சிறுத்தையைக் கண்டு கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

aralvaimozhi
author img

By

Published : Nov 14, 2019, 4:12 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி அருகே அமைந்துள்ளது ஆரல்வாய்மொழி, குமார புரம், தோவாளை ஆகிய சுற்று வட்டார கிராமங்கள். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் விவசாயம், ஆடு, மாடு வளர்ப்பதையே முக்கியத் தொழிலாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியைச் சேர்ந்த தாணுப்பிள்ளை என்பவர் தனது வீட்டின் அருகே அமைந்துள்ள தோட்டத்தில் ஆட்டு பண்ணை வைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று, இரை தேடி தாணுப்பிள்ளையின் ஆட்டு மந்தைக்குள் நுழைந்து ஆடு ஒன்றை கடித்து கொண்டு இருந்தது. இதைக் கண்ட மற்ற ஆடுகள் சத்தமிட்டன.

ஆடுகளின் சத்தம் கேட்டு ஆட்டு மந்தைக்கு வந்த தாணுப்பிள்ளை அங்கு சிறுத்தை நின்று இருப்பதையும்; ஆட்டைக் கடித்து வைத்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.

அதனைத் தொடர்ந்து, உடனே கிராம மக்கள் அனைவரும் வந்து கூச்சலிட்டு சத்தமிடவே, சிறுத்தை ஆட்டை கடித்துக் கொண்டு வனப்பகுதிக்குள் ஓடி தப்பிச் சென்றது.

ஆனால், சிறுத்தை மீண்டும் இரை தேடி கிராமப் பகுதிகளில் நுழைய வாய்ப்புள்ளதால் ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சிறுத்தையைக் கண்டு அச்சத்தில் உள்ள ஆரல்வாய்மொழி கிராம மக்கள்

மேலும் சிறுத்தையை உடனடியாகப் பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; கிராம மக்கள் அச்சதுடன் தெரிவித்துள்ளனர். இதேபோல், கடந்த மாதம் ஆரல்வாய்மொழி பகுதியில் புகுந்த சிறுத்தை இரண்டு ஆடுகளைக் கடித்து இழுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஊருக்குள் புகுந்து சிறுத்தை அட்டகாசம் - ஆடுகள் பலி

Intro:கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி அருகே அமைந்துள்ள ஆரல்வாய்மொழி கிராமத்தில் அதிகாலையில் புகுந்த சிறுத்தை புலி. ஆட்டு மந்தையில் இருந்த ஆட்டை கடித்து வனத்துத்துக்குள் கொண்டு சென்றது. மீண்டும் கிராமத்திற்க்குள் சிறுத்தை புலி வரும் அபாயத்தால் கிராம மக்கள் அச்சம்.Body:tn_knk_01_siruthaipuli_acham_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி அருகே அமைந்துள்ள ஆரல்வாய்மொழி கிராமத்தில் அதிகாலையில் புகுந்த சிறுத்தை புலி. ஆட்டு மந்தையில் இருந்த ஆட்டை கடித்து வனத்துத்துக்குள் கொண்டு சென்றது. மீண்டும் கிராமத்திற்க்குள் சிறுத்தை புலி வரும் அபாயத்தால் கிராம மக்கள் அச்சம்.

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியையொட்டி அமைந்துள்ளது ஆரல்வாய்மொழி மற்றும் குமாரபுரம் தோவாளை சுற்று வட்டார பகுதி கிராமங்கள் . இங்குள்ள மக்களுக்கு விவசாயம் மற்றும் ஆடு மாடுகளை வளர்ப்பதே மிக்கிய தொழிலாக செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் தாணுபிள்ளை தனது வீட்டின் அருகே அமைந்துள்ள தோட்டத்தில் ஆட்டு பண்ணை வைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இதைப்போல் முருகன் என்பவரும் தனது சோந்தமான பகுதியில் மாடுகளை வளர்த்து வருகிறார். இதனிடையெ இன்று அதிகாலை மேற்க்கு தொடர்ச்சியின் வனபகுதியில் இருந்து சிறுத்தை புலி ஒன்று ஆரல்வாய்மொழி கிராமத்திற்க்குள் நுழைந்தது. இந்த சிறுத்தை புலியானது இரை தேடி தாணுபிள்ளையின் ஆட்டு மந்தைக்குள் நுழைந்து ஆடு ஒன்றை கடித்து கொண்டு இருந்தது. சிறுத்தையை கண்டு மந்தையில் உள்ள ஆடுகள் கதறியததால் சத்தம் கேட்டு மந்தைக்கு வந்த தாணுபிள்ளை அங்கு சிறுத்தை நின்று இருப்பதையும் ஆட்டை கடித்து வைத்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே கிராம மக்கள் அனைவரும் வந்து கூச்சலிட்டு சத்தமிடவே சிறுத்தை புலி ஆட்டை கடித்து கொண்டு வனபகுதிக்குள் ஓடி தப்பி விட்டது. இதனால் மீண்டும் இரை தேடி சிறுத்தை புலி கிராம பகுதிகளில் வர வாய்ப்புள்ளதால் ஆரல்வாய்மொழி சுற்று வட்டார கிராம மக்கள் அச்சதுடனே இருந்து வருகிறார்கள். மேலும் சிறுத்தை புலியை உடனடியாக பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் அச்சதுடன் தெரிவித்தார்கள் . கடந்த மாதம் இதே பகுதியில் புகுந்த சிறுத்தை புலி இரண்டு ஆடுகளை கடித்து இழுத்து சென்றது குறிப்பிடதக்கது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.