ETV Bharat / state

வழக்கறிஞரைத் தாக்கிய காவல் உதவி ஆய்வாளருக்கு எதிராக மனு - Lawyers association

குமரி: தக்கலை காவல் நிலையத்திற்குச் சென்ற வழக்கறிஞரை, காவல் உதவி ஆய்வாளர் தாக்கிய சம்பவம் குறித்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் வழக்கறிஞர் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.

Lawyers association complaint
Lawyers association complaint
author img

By

Published : Nov 27, 2019, 3:11 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்திற்கு ஒரு வழக்கு விசாரணை குறித்து தெரிந்து கொள்வதற்காக வழக்கறிஞர் ஜெயகுமார் என்பவர் சென்றுள்ளார். அப்போது அங்கே காவல் உதவி ஆய்வாளராக பணியில் இருந்த ரமேஷ், வழக்கறிஞர் ஜெயகுமாரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இரண்டு தினங்களுக்கு முன் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியும் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, வழக்கறிஞரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் வழக்கறிஞர் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.

வழக்கறிஞர் சங்கத்தினர் செய்தியாளர் சந்திப்பு

மேலும், உதவி ஆய்வாளர் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், அடுத்த கட்டப் போராட்டங்கள் தீவிரப் படுத்தப்படும் என்றும், தமிழ் நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இதையும் படிங்க:

சபரிமலை சீசன் : குமரியில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்திற்கு சென்ற வழகறிஞரை உதவி ஆய்வாளர் தாக்கிய சம்பவம் குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் வழக்கறிஞர் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர். எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Body:கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்திற்கு ஒரு வழக்கு விசாரணை குறித்து தெரிந்து கொள்வதற்காக வழக்கறிஞர் ஜெயகுமார் என்பவர் சென்றுள்ளார். அப்போது அங்கே உதவி ஆய்வாளராக பணியில் இருந்த ரமேஷ் வழக்கறிஞர் ஜெயகுமாரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இரண்டு தினங்களுக்கு முன் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தியும் சம்பந்த பட்ட உதவி ஆய்வாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே வழக்கறிஞரை தாக்கிய உதவி ஆய்வாளர் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் வழக்கறிஞர் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.
உதவி ஆய்வாளர் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டங்கள் தீவிர படுத்தப்படும் என்றும், தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பாட்டு உள்ளதாக வழகறிஞர்கள் குற்றசாட்டி உள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.