கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆறு பேர் கரோனா தொற்று பாதிப்பிற்குள்ளாகி சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் நான்கு பேர் டெல்லியில் நடைபெற்ற சமய மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் இவர்களது உறவினர்களை பரிசோதனை செய்ததில் கூடுதலாக ஒன்பது பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் பெண் போலீஸ் உட்பட நான்கு பேருக்கு கரோனா அறிகுறி தென்படுவதாகக்கூறி அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது சளி, ரத்த மாதிரிகள் கரோனா பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா அச்சத்தில் கன்னியாகுமரி!