குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டன. இதில் குலசேகரபுரம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக பிரமுகரான சுடலையாண்டி 838 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
அதேபோல, குலசேகரபுரம் வடக்குத் தாமரைகுளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட சுடலையாண்டியின் மனைவியான சண்முகவடிவு அதிமுக சார்பில் வெற்றிபெற்றார். இதனால், ஒரே ஊராட்சியில் தேர்தலில் போட்டியிட்ட கணவன், மனைவி வென்ற சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தலில் வெற்றிபெற்றவர் உடல்நலக் குறைவால் மறைவு!