கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே நாகர்கோவில் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் துவாரகை கிருஷ்ணன் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் நேற்று (ஆக.21) நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் சுவர் ஏறி குதித்து சாமி முன்பு வைக்கப்பட்டிருந்த கண்மலர், நாமம், கொலுசு, வெள்ளி ஆபரணங்கள், தங்க நகைகள், உண்டியல் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று (ஆக.22) காலை கோயிலுக்கு வந்த பூசாரிக்கு திருட்டு சம்பவம் தெரியவந்தது. இது குறித்து பூசாரி கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்ற வாரத்தில் மட்டும் கன்னியாகுமரியில் 10க்கும் மேற்பட்ட கோயில்களில் தொடர் கொள்ளை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அம்மன் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை திருடிய இளைஞர்கள்: தர்ம அடி கொடுத்த மக்கள்!