மனித பாதுகாப்புக் கழகத்தின் மாநிலத் தலைவர் ஜெயமோகன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "கந்துவட்டி கொடுமையைத் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவித்த கிசான் திட்டத்தில் கோழி பயனாளிகளைச் சேர்த்து தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்துள்ளது.
மாவட்ட வாரியாக இந்த மோசடி குறித்து கணக்கெடுக்கப்பட்டுவந்த நிலையில் இதுபற்றி விசாரிக்க வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்தத் திட்டத்தில் நடந்த மோசடி குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் அதே இலாகாவில் பணிபுரியும் அலுவலர்களைக் கொண்டு விசாரணை நடத்துவதால் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படப் போவதில்லை.
எனவே உயர்மட்ட அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு முழுவதும் நடந்த இந்த மோசடிகள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வு காரணமாக பல மாணவ - மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட நிலை தொடர்ந்து வருவதால் இந்தத் தேர்வை மாணவ - மாணவிகள் புறக்கணிக்க வேண்டும்" என்றார்.
கிசான் திட்ட முறைகேடு: உயர்மட்ட அலுவலர்களை நியமிக்க கோரிக்கை
கன்னியாகுமரி: கிசான் திட்ட முறைகேடுகளை விசாரிக்க உயர்மட்ட அலுவலர்களை நியமித்தால்தான் முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என மனித பாதுகாப்புக் கழகத்தின் மாநிலத் தலைவர் ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.