கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் வருமானமின்றி, உண்ண உணவின்றித் தவித்து வருகின்றனர்.
மேலும் உணவகங்களிலும் பார்சல் முறையில் மட்டுமே உணவு வழங்குவதாலும், பொதுமக்கள் வெளியே நடமாட்டம் இல்லாத காரணத்தாலும் குமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள தெரு நாய்கள் உணவின்றி இறந்து வருகின்றன.
இந்நிலையில் இதனைத்தடுக்க கென்னல் கிளப் நிர்வாகியான பார்வதி, தன்னார்வம் உள்ளவர்களிடம் இருந்து பெறப்படும் நிதியை வைத்து, உணவு சமைத்து, அதனை தேரூர் முதல் நாகர்கோவில் வழியாக சுங்கான்கடை வரையிலுள்ள தெரு நாய்களுக்கு மினி லாரி மூலம் கொடுத்து வருகிறார். தொடர்ந்து 250 நாள்களாக தெரு நாய்களுக்கு உணவுப் பரிமாறி வருகிறார்.
மேலும் தான் செய்வதைப் பார்த்து, மற்றவர்களும் இதுபோன்று தெருநாய்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான், இதை செய்வதாகவும்; பொதுமக்கள் தங்கள் வீடுகளின் அருகில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கும் உணவளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்குக