ETV Bharat / state

காவலன் செயலியை யாரும் விளையாட்டுத்தனமாக பயன்படுத்தக்கூடாது - டிஎஸ்பி பாஸ்கரன் - காவலன் செயலில் டெமோ

கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் தனியார் கல்லூரியில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

dsp baskaran
dsp baskaran
author img

By

Published : Dec 13, 2019, 9:59 AM IST

Updated : Dec 13, 2019, 10:49 AM IST

தமிழ்நாடு காவல்துறை சார்பில் பெண்கள் ஆபத்து, அவசர காலங்களில் தங்களை தற்காத்துகொள்ளவும், தங்கள் இருக்குமிடத்தை காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் காவலன் என்னும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

காவலன் செயலியை யாரும் விளையாட்டுத்தனமாக பயன்படுத்தக்கூடாது

இச்செயலி குறித்த விளக்கம் தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் அஞ்சுகிராமம் அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இந்த செயலியின் செயல் விளக்கமும் விழிப்புணர்வும் கொடுக்கப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் சாந்தி, எஸ்ஐக்கள் ஜெஸி மேனகா மற்றும் அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து பேசிய டிஎஸ்பி இதனை விளையாட்டுத்தனமாக யாரும் பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

Intro:பெண்களின் பாதுகாப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காவலன் செயலி குறித்த செயல்முறை விளக்கம் டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் அஞ்சுகிராமம் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.Body:tn_knk_02_police_app_demo_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

பெண்களின் பாதுகாப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காவலன் செயலி குறித்த செயல்முறை விளக்கம் டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் அஞ்சுகிராமம் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக காவல்துறை சார்பில் "காவலன் SOS" எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பகல் மற்றும் இரவு நேரத்தில் தனக்கு பாதுகாப்பற்ற சூழலை உணரும் பெண்கள் தங்கள் செல் ஃபோனில் உள்ள SOS எனும் பொத்தானை அழுத்தினால் போதும், அழைப்பவரின் இருப்பிடம் குறித்த தகவல் ஜிபிஎஸ் மூலம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு உடனே சென்று விடும். அடுத்த சில நிமிடங்களிலேயே காவல்துறை ரோந்து வாகனம் அந்த பெண் உள்ள இடத்திற்கு வந்து நிற்கும். செயலியில் உள்ள SOS பொத்தானை அழுத்தும் போது, செல்போனில் உள்ள கேமரா தானாகவே 15 விநாடிகளில் வீடியோ எடுத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி விடும். செல்போன் சிக்னல் இல்லாத இடங்களிலும் குறுஞ்செய்தி கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளில் பயன்படுத்த முடியும்.
செயலியின் பதிவு பக்கத்தில் பெயர், செல்போன் எண்ணை பதிவு செய்து, அடுத்த பக்கத்தில் முகவரி, மின்னஞ்சல் முகவரி பதிவு செய்தால் போதும் காவலன் செயலி பயன்படுத்த தயாராகி விடும். பெண்களின் அவசர உதவிக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி குறித்த விழிப்புணர்வு தற்போது பெண்கள் மத்தியில் குறைவாகவே உள்ளது. இதனால் இதுகுறித்து பெண்கள் மற்றும் மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அஞ்சுகிராமம் அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இதில் இன்ஸ்பெக்டர் சாந்தி, எஸ்ஐக்கள் ஜெஸி மேனகா மற்றும் அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டு செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து விரிவாக பேசிய டிஎஸ்பி இதனை விளையாட்டுத்தனமாக யாரும் பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

Conclusion:
Last Updated : Dec 13, 2019, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.