குமரி மாவட்டம் நாகர்கோயிலை அடுத்துள்ள ஆனைபொத்தை பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (26). லாரி ஒட்டுநராக பணியாற்றும் இவர், பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டது. இதனைத் தொடர்ந்து சந்தோஷ் குமாரை காவலர்கள் கைது செய்தனர்.
இதற்கிடையில், சந்தோஷ் குமார் ஏற்கனவே 2018இல் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் இவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த காமக்கொடூரன் போக்சோவில் கைது!