ETV Bharat / state

குமரியில் தொடர்மழை: பூ விற்பனை பாதிப்பு - thovalai flower sellers request

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக தோவாளை மலர் சந்தையில் பூ விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூ வியாபாரிகள் மழைக்காலங்களில் பூ விற்பனை செய்ய நிரந்தரக் கூடாரம் அமைத்துத் தர கோரிக்கைவிடுத்துள்ளனர்.

kanyakumari thovalai flower sellers request
author img

By

Published : Sep 4, 2019, 2:32 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் தோவாளை, ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர், சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பூக்கள் விற்பனைக்கு பெயர்பெற்ற தோவாளை மலர் சந்தையில் பூ விற்பனை முற்றிலும் முடங்கியது.

மேலும் திண்டுக்கல், மதுரை, ராயக்கோட்டை, ஒசூர், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து தோவாளை மலர் சந்தைக்கு விற்பனைக்காக வந்த சுமார் ஐந்து டன்னுக்கும் அதிகமான பூக்களும் மழை காரணமாக விற்பனை செய்ய முடியாமல் சந்தையிலேயே தேக்கம் அடைந்துள்ளது. இதனால் பூ வியாபாரிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

குமரியில் தொடர்மழை காரணமாக பூக்கள் விற்பனை பாதிப்பு

மழையின் காரணமாக தோவாளை மலர் சந்தையில் மல்லிகை 300 ரூபாய், பிச்சி 200 ரூபாய், மஞ்சள் கேந்தி 30 ரூபாய், சிவப்பு கேந்தி 40 ரூபாய், துளசி 20 ரூபாய், தாமரை ஒன்று ஏழு ரூபாய் என அனைத்து ரக பூக்களின் விலையும் குறைந்துள்ளது. இதனால் தோவாளை மலர் சந்தை வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளார்கள். எனவே, மழைக் காலங்களில் பூக்கள் விற்பனை செய்வதற்காக மலர் சந்தையில் நிரந்தரக் கூடாரம் அமைத்துத் தர பூ வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Intro:கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, தோவாளை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்ப்பனை கடும் பாதிப்பு. இன்று மட்டும் சுமார் ஐந்து டண்னுக்கும் அதிகமான பூக்கள் தேக்கம். பல லட்ச ரூபாய் நஷ்டம். இதனால் பூ வியாபாரிகள் வேதனை. மழை காலங்களில் பூ விற்பனை செய்ய நிரந்தர கூடாரம் அமைத்து தர பூ வியாபாரிகள் கோரிக்கை Body:tn_knk_01_thovalai_flower_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, தோவாளை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்ப்பனை கடும் பாதிப்பு. இன்று மட்டும் சுமார் ஐந்து டண்னுக்கும் அதிகமான பூக்கள் தேக்கம். பல லட்ச ரூபாய் நஷ்டம். இதனால் பூ வியாபாரிகள் வேதனை. மழை காலங்களில் பூ விற்பனை செய்ய நிரந்தர கூடாரம் அமைத்து தர பூ வியாபாரிகள் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந் நிலையில் தோவாளை , ஆரல்வாய்மொழி , செண்பகராமன் புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதலே நல்ல மழை பெய்து கொண்டு இருந்தது. இதன் காரணமாக தமிழத்தில் பூக்கள் விற்ப்பனைக்கு புகழ் பெற்ற தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை முற்றிலும் முடங்கியது. அதிகாலை முதலே பரப்பரபாக காணப்படும் தோவளை மலர் சந்தை பூக்கள் வாங்குவதற்க்கு பூ வியாபாரிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் திண்டுகல், மதுரை, ராயகோட்டை, ஓசூர் மற்றும் தமிழத்தில் பல மாவட்டாங்களில் இருந்து தோவாளை மலர் சந்தைக்கு விற்ப்பனைக்காக வந்த சுமார் ஐந்து டன்னுக்கும் அதிகமான பூக்களும் மழை காரணமாக விற்பனை செய்ய முடியால் தோவாளை மலர் சந்தையிலேயே தேக்கம் அடைந்தது. இதனால் பூ வியாபாரிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக தோவாளைளமலர் சந்தையில் மல்லிகை 300 ரூபாய்க்கும் பிச்சி 200 ரூபாயாகவும் மஞ்சள் கேந்தி 30 ரூபாயாகவும் சிகப்பு கேந்தி 40 ரூபாயாகவும் துளசி 20 ரூபாயாகவும் ஒரு தாமரை ஏழு ரூபாய் என அனைத்து ரக பூக்களின் விலையும் குறைந்துள்ளது. இதனால் தோவாளை மலர் சந்தை வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளார்கள். மழை காலங்களில் பூக்கள் விற்பனை செய்வதற்காக மலர் சந்தையில் நிரந்தர கூடாரம் அமைத்து தர தோவாளை மலர் சந்தை பூ வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை .Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.