ETV Bharat / state

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேர் திருவிழா! - kanyakumari suchindram temple fuction

கன்னியாகுமரி: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி மாத தேர் திருவிழாவில் பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.

தேர் திருவிழா
தேர் திருவிழா
author img

By

Published : Jan 9, 2020, 12:57 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற சுசீந்தரம் தாணுமாலைய சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் மார்கழி மாத தேர் பெருந்திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான மார்கழி மாத தேர் பெருந்திருவிழா ஜனவரி 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு பூஜைகள், மக்கள் மார் சந்திப்பு, சுவாமி வீதி உலா, கருடாழ்வார் தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 9ஆவது நாளான இன்று தேர் திருவிழா நடைபெறுவதற்கு முன்பு, கோயிலில் இருந்து பல்லாக்கில் சுவாமி ஊர்வலமாக வந்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் துப்பாக்கி ஏந்திய காவலர் அணி வகுப்பு மரியாதை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேர் திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து விழாவை சிறப்பித்தனர். இந்த திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடும் கொலையாளிகள்: சிசிடிவி

Intro:கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி மாத தேர் திருவிழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. பகதர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். தேர் திருவிழாவினை முன்னிட்டு இன்று குமரி மாவட்டதிற்கு உள்ளூர் விடுமுறை. Body:tn_knk_01_sucinthiram_therotam_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி மாத தேர் திருவிழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. பகதர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். தேர் திருவிழாவினை முன்னிட்டு இன்று குமரி மாவட்டதிற்கு உள்ளூர் விடுமுறை.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்தரம் தாணுமாலைய சுவாமி கோவில் ஆகும்.இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் மார்கழி மாத தேர் பெருந்திருவிழா பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாட படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான மார்கழி மாத தேர் பெருந்திருவிழா ஜனவரி ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், மக்கள் மார் சந்திப்பு, சுவாமி வீதி உலா வருதல், கருடாழ்வார் தரிசனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றன. ஒன்பதாவது நாள் திருவிழாவான இன்று தேர் திருவிழா நடைபெற்றது. முன்னதாக கோவிலில் இருந்து பல்லாக்கில் சுவாமி ஊர்வலமாக வந்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்சி நடைபெற்றது, அப்போது கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் துப்பாக்கி ஏந்திய போலிஸ் அணி வகுப்பு மரியாதை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பக்தர்களால் தேர் வடம் பிடித்து இழுக்க பட்டது. குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். தேர் திருவிழாவினை முன்னிட்டு இன்று குமரி மாவட்டதிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கபட்டு உள்ளது. ஆருத்ரா தரிசனம், திருஆராட்டுயுடன் நாளை பத்தாம் நாள் விழாவுடன் மார்கழி திரு விழா நிறைவு பெறுகிறது.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.