ETV Bharat / state

உதவி ஆய்வாளர் கொலை வழக்கு: கொலையாளி குறித்து துப்பு கொடுத்தால் ரூ.7 லட்சம் ரெடி

களியக்காவிளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளுடன் தொடர்பிலிருந்த மேலும் 11 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் சூழலில், கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கான வெகுமதியை ரூ.7 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு காவல் துறை அறிவித்துள்ளது.

Police shot dead reward increased, kanyakumari si shot dead issue  reward increased to catch killers, kanyakumari police killed, உதவி ஆய்வாளர் கொலை வழக்கு, கொலையாளியை குறித்து துப்பு கொடுத்தால் 7 லட்சம் ரெடி
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன்
author img

By

Published : Jan 11, 2020, 11:41 PM IST

கன்னியாகுமரி: சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொலையாளிகள் குறித்து தகவல் அளிப்போருக்கான வெகுமதியை உயர்த்தி காவல் துறை அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் ஜனவரி 8ஆம் தேதி இரவு பணியிலிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக மாவட்டத்தின் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த அப்துல் சமீம் (32), நாகர்கோவில் இளங்கடையைச் சேர்ந்த தவுபிக் (28) ஆகியோரை காவல் துறை அறிவித்தது.

வில்சனின் குடும்பத்திற்கு நிவாரண உதவி

இவர்கள் குறித்த தகவலைக் கொடுப்போருக்கு கேரள காவல் துறையினர் ஏற்கனவே ரூ.5 லட்சம் வெகுமதி வழங்குவதாகவும், தமிழ்நாடு காவல்துறை ரூ.4 லட்சம் வெகுமதி வழங்குவதாகவும் அறிவித்திருந்தது. இச்சூழலில் கொலையாளிகள் குறித்து துப்பு கொடுப்போருக்கான வெகுமதியை ரூ.7 லட்சமாக உயர்த்தி கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான அப்துல் சமீம், தவுபிக் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள், மாவட்ட காவல் தனிப்பிரிவிற்கு 04652 220167 என்ற எண்ணிலோ, 7010363173 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்போரின் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஏற்கனவே நேற்று கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், கேரளாவை சேர்ந்த ஒருவர் என 3 பேரை கேரளாவில் பிடித்த தனிப்படை காவல் துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களுடன் தொடர்பிலிருந்த மேலும் 11 பேரை சிறப்புப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இவர்கள் 11 பேருமே கொலையாளிகளுடன் அடிக்கடி தொடர்பிலிருந்த நண்பர்கள், உறவினர்கள் ஆவர். இந்த விசாரணையின்போது குற்றவாளிகள் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. தவ்பீக், அப்துல் சமீமுடன் தொடர்பிலிருந்த பயங்கரவாதிகள் பெங்களூர் மற்றும் பிற பகுதிகளில் கைது செய்யப்பட்டு வருவதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இக்கொலையை நடத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கத்திக்குத்து... துப்பாக்கிச்சூடு - எஸ்ஐ வில்சன் உடற்கூறாய்வில் அதிர்ச்சி தகவல்

இதற்கு பணி ஓய்வுபெறும் நிலையிலும் உடல் பலம் குறைந்த நிலையிலும் காணப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனை குறிவைத்துள்ளனர். அதுமட்டுமின்றி அதிக ஆள்நடமாட்டம் இல்லாத வேலைநிறுத்த தினமான ஜனவரி 8ஆம் தேதியையும், மறைவுப் பகுதியில் இருப்பதைப் போன்ற சோதனைச் சாவடியையும் திட்டமிட்டுத் தேர்வு செய்துள்ளனர்.

வில்சனைக் கொலை செய்த பின்பு கார் அல்லது வேறு வாகனத்தில் தப்பிச் சென்றால் காவல் துறையினரின் கடும் வாகனச் சோதனையில் கண்டிப்பாக சிக்கக்கூடும் என்பதைக் கணித்து, கொலைசெய்த பின்பு பக்கத்திலுள்ள கேரள எல்லைப் பகுதியான இஞ்சிவிளை வரை வாகனம் ஏதுமின்றி நடந்தே சென்றுள்ளனர். காவல் துறையினரைத் திசைதிருப்பி சினிமா பாணியில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் புகைப்படம் வெளியீடு..!

தமிழ்நாடு காவல் இயக்குநர் திரிபாதி உத்தரவின்பேரில், தென்மண்டல காவல் துறை தலைவர் சண்முக ராஜேஷ்வரன் மேற்பார்வையில் குற்றவாளிகளைப் பிடிக்க பலகட்ட வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. காவல் துறையிலுள்ள நவீன நுட்பங்களைப் பயன்படுத்தி அவர்கள் பயன்படுத்திய கைபேசி எண், டவர் போன்றவற்றின் மூலம் கொலையாளிகள் மறைந்திருக்கும் இடங்களைத் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளுடன் தொடர்பில் இருந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த மேலும் 11 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைகளிகள் குறித்த தகவல் தெரிவிப்போருக்கான வெகுமதியை ரூ.7 லட்சமாகவும் உயர்த்தி காவல்துறை அறிவித்துள்ளது.
Body:கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் படந்தாலுமூடு சோதனை சாவடியில் கடந்த 8ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக குமரி மாவட்டதம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம்(32), நாகர்கோவில் இளங்கடையை சேர்ந்த தவுபிக்(28) ஆகியோரை காவல்துறை அறிவித்துள்ளது.

இவர்கள் குறித்த தகவல் கொடுப்போருக்கு கேரள போலீஸார் ஏற்கனவே ரூ.5 லட்சம் வெகுமதி வழங்குவதாகவும், தமிழக காவல்துறை ரூ.4 லட்சம் வெகுமதி வழங்குவதாகவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் வெகுமதியை ரூ.7 லட்சமாக உயர்த்தி கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக குமரி எஸ்.பி. ஸ்ரீநாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான அப்துல் சமீம், தவுபிக் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் குமரி மாவட்ட காவல் தனிப்பிரிவிற்கு 04652 220167 என்ற எண்ணிலோ, 7010363173 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ தகவல்தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே நேற்று கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், மற்றும் கேரளாவை சேர்ந்த ஒருவர் என 3 பேரை கேரளாவில் பிடித்த தனிப்படை போலீஸார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை நடந்த நாளில் இருந்தே தல்பிக், அப்துல் சலீம் ஆகியோரின் நண்பர்கள் சிலரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 11 பேரை தனிப்படை, மற்றும் கியூ பிராஞ்ச் போலீஸார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் 11 பேருமே கொலையாளிகளுடன் அடிக்கடி தொடர்பில் இருந்த நண்பர்கள், உறவினர்கள் ஆவர்.

இந்த விசாரணையின்போது குற்றவாளிகள் குறித்த பல தகவல்கள் கிடைத்துள்ளன. தவ்பீக், அப்துல் சமீமுடன் தொடர்பில் இருந்த தீவிரவாதிகள் பெங்களூர், மற்றும் பிற பகுதிகளில் கைது செய்யப்பட்டு வருவதற்கு பதிலடி கொடுத்து போலீஸாரை அச்சுறுத்தும் வகையில் இக்கொலையை நடத்தியுள்ளதும் விசாரணையில தெரியவந்துள்ளது.

இதற்கு பணி ஓய்வுபெறும் நிலையில் உடல் பலம் குறைந்த நிலையில் காணப்பட்ட எஸ்.ஐ. வில்சனை குறிவைத்துள்ளனர். அதுமட்டுமின்றி அதிக ஆள்நடமாட்டம் இல்லாத வேலை நிறுத்த தினமான 8ம் தேதியையும், மறைவு பகுதியில் இருப்பதை போன்ற சோதனை சாவடியையும் திட்டமிட்டு தேர்வு செய்துள்ளனர்.

வில்சனைகொலை செய்த பின்பு கார், அல்லது பிற வாகனத்தில் தப்பி சென்றால் போலீஸாரின் கடும் வாகன சோதனையில் கண்டிப்பாக சிக்கக்கூடும் என்பதை கணித்து, கொலை செய்த பின்பு பக்கத்தில் உள்ள கேரள எல்லை பகுதியான இஞ்சிவிளைவரை வாகனம் ஏதும் இன்றி நடந்தே சென்றுள்ளனர். போலீஸாரை திசைதிருப்பி சினிமா பாணியில் அவர்கள் தப்பி சென்றுள்ளனர்.

தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவின் பேரில் தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஷ்வரன் மேற்பார்வையில் குற்றவாளிகளை பிடிக்க பலகட்ட வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. காவல்துறையில் உள்ள நவீன நுட்பங்களை பயன்படுத்தி அவர்கள் பயன்படுத்திய செல்பேசி எண், டவர் போன்றவற்றின் மூலம் கொலையாளிகள் மறைந்திருக்கும் இடங்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.