கன்னியாகுமரி: தமிழ்நாடு முழுவதும் வடகிழக்குப் பருவமழை பெய்துவருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. ரயில் நிலையங்கள், தண்டவாளத்தில் நீர் சூழ்ந்துள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கன்னியாகுமரி வழியாக வந்துசெல்லும் விரைவு ரயில்கள் மழை பாதிப்பு காரணமாக ரத்துசெய்யப்பட்டு, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, திருவனந்தபுரம் சென்ட்ரலிலிருந்து நாகர்கோவில் சந்திப்பு வரும் தினசரி விரைவு ரயில், அதேபோல் நாகர்கோவில் சந்திப்பிலிருந்து திருவனந்தபுரம் சென்ட்ரல் செல்லும் விரைவு ரயில், கொல்லத்திலிருந்து நாகர்கோவில் சந்திப்பு வரும் விரைவு ரயில் ஆகியவை ரத்துசெய்யப்பட்டுள்ளன.
இதுதவிர சென்னை, வெளி மாநிலங்களிலிருந்து கன்னியாகுமரி வரும் பல்வேறு விரைவு ரயில்களும், பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து கன்னியாகுமரி வழியாக சென்னை, வெளி மாநிலங்களுக்குச் செல்லும் பல்வேறு ரயில்களும் பகுதியாக ரத்துசெய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க: கனமழை: கல்வி நிலையங்களுக்கு விடுமுறை