கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே முத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் வர்க்கீஸ். இவருக்கு சொந்தமான பசு ஒன்று இருக்கிறது. சில தினங்களில் கன்று ஈனும் நிலையில் உள்ள சினை பசுவான அது அப்பகுதியில் புல் மேய்ந்துக் கொண்டிருந்தது.
அப்போது, தனியாருக்கு சொந்தமான சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் ஊழியர்கள், பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டு இருந்த திறந்த நிலையில் உள்ள கழிவு நீர் தொட்டிக்குள் சினை பசு தவறி விழுந்தது. தவறி விழுந்த பசு உயிருக்கு ஆபத்தான நிலையில் கழிவு நீர் தொட்டியில் இருந்து வெளியே வர அலறியது.
பசுவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், அதனை மீட்க முயன்றனர். ஆனால் இளைஞர்களால் பசுவை மீட்க முடியாததால் நாகர்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவம் இடம் வந்த ஏழு பேர் கொண்ட தீயணைப்பு துறையினர், அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் பல மணி நேரம் போராடி பசுவை உயிருடன் மீட்டனர்.
இதையும் படிங்க: “அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்த பசுமாடு“- பரவசப்படுத்தும் காணொலி!