ETV Bharat / state

தீவிரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க "சஜாக்" பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி.! - Kanyakumari "Sajak" security rehearsal

கன்னியாகுமரி: தீவிரவிரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் "சஜாக்" என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

கன்னியாகுமரி "சஜாக்" பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி.! கன்னியாகுமரி போலீஸ் "சஜாக்" பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி "சஜாக்" பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி "Sajak" security rehearsal Kanyakumari Police "Sajak" security rehearsal Kanyakumari "Sajak" security rehearsal Kanyakumari Police Sajak Operation
Kanyakumari "Sajak" security rehearsal
author img

By

Published : Feb 22, 2020, 3:59 AM IST

கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தியதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் கடல் பகுதிகளை ஆய்வாளர் நவீன் தலைமையில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனால், அவ்வப்போது சீ விஜில், சஜாக், அம்லா, சாகர் கவாச் என பல்வேறு பெயர்களில் ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், “சஜாக்” என்ற பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. காலை 6 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சின்னமுட்டம், மகாதானபுரம், குளச்சல் உள்பட ஆறு சோதனைச் சாவடிகளையும் காவல் துறையினர் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

அதன்படி, சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினருக்குச் சொந்தமான மூன்று அதி விரைவு படகுகளில் கூடங்குளம் அணு உலை பின்புறம் மற்றும் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 48 கடற்கரை மீனவ கிராமங்களை கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

"சஜாக்" பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி மேற்கொள்ளும் காவல் துறையினர்

அப்போது, கடல் பகுதிகளில் சந்தேகப்படும்படியான படகுகள் தென்பட்டால் அவற்றை வழிமறித்து விசாரணை செய்து அனுப்பி வைக்கின்றனர். மேலும் அதிநவீன நுண்ணோக்கிகள் மூலம் தொலைதூரத்தையும் கண்காணித்து வருகின்றனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:மாநிலங்களுக்கு ரூ.19,950 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு - மத்திய அரசு தகவல்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.