ETV Bharat / state

Tiruvannamalai ATM Robbery: தமிழ்நாடு - கேரளா எல்லையில் சோதனை தீவிரம்! - DGP Sylendra Babu

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் மையங்களீல் கொள்ளை எதிரொலியாக, தமிழ்நாடு கேரளா மாநில எல்லையில் கன்னியாகுமரி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 13, 2023, 7:53 AM IST

Updated : Feb 13, 2023, 8:46 AM IST

தி.மலை ஏடிஎம் கொள்ளை; தமிழ்நாடு கேரளா எல்லையில் போலீசார் உஷார்!

கன்னியாகுமரி: திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளையில் ஆந்திரா பதிவு எண் கொண்ட வாகனம் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், கொள்ளையர்கள் மாறுவேடத்தில் தப்பித்து செல்லாம் என்ற கோணத்தில் தமிழ்நாடு கேரளா எல்லை மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் இரவு பகலாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து 4 ஏடிஎம் எந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கத் தமிழ்நாடு போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு, வாகன சோதனை மற்றும் விடுதிகளில் சோதனையைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

அந்தவகையில் கொள்ளையர்கள் ஆந்திரா பதிவு எண் கொண்ட வாகனம் பயன்படுத்தியதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலும் கொள்ளையர்கள் மாறுவேடத்தில் தப்பி செல்லாம் என்ற கோணத்திலும் தமிழ்நாடு கேரளா எல்லை மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் நேற்று (பிப்.12) ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் இரவு முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளா மார்க்கமாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள், கடற்கரை சாலை, மலைப்பாங்கான சாலைகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து வழித்தடங்களிலும் இரவு முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். வேறு மாநில பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு வாகனங்களில் வருபவர்களிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலையில் நள்ளிரவில் அடுத்தடுத்து 4 ஏடிஎம் மையங்களில் கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து சுமார் ரூ.75 லட்சம் வரை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதனையடுத்து, இந்த ஏடிஎம் கொள்ளை தொடர்பாக, திருவண்ணாமலை டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் 6 தனிப்படை போலீசார் திவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

நள்ளிரவில் ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பத்தில் ஏடிஎம் எந்திரத்தில் பணத்தைக் கொள்ளையடித்த பின்னர், தீ வைத்து எரித்ததுடன் அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள், ஹார்ட் டிஸ்க்குகள் ஆகியவற்றையும் எரித்துவிட்டனர். இதனால், போலீசாருக்கு ஏடிஎம் கொள்ளையர்களைப் பிடிப்பதில் சவால் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கொள்ளை நடந்த 4 ஏடிஎம்களும் ஆந்திரா மாநிலம் செல்லும் வழியில் உள்ளதாகவும், அதே நேரத்தில் ஆந்திரா பதிவு எண் கொண்ட டாடா சுமோ கார் ஒன்று அப்பகுதியில் இருந்ததை சிசிடிவி கேமிராவில் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

தொடர்ந்து, கொள்ளையர்களைத் தேடி ஆந்திராவிற்கும் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு இந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஹரியானவைச் சேர்ந்த கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளதாகச் சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஏடிஎம் கொள்ளை எதிரொலி: தருமபுரி -சுங்க சாவடியில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கை!

Last Updated : Feb 13, 2023, 8:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.