கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குலசேகரபுரம் அடுத்த ஓசரவிளை பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்க செல்வகுமார். தனியார் பள்ளி ஆசிரியரான இவர், குலசேகரபுரம் ஊராட்சியில் முன்னாள் துணைத் தலைவராக பதவி வகித்துள்ளதோடு, திமுக கிளை செயலாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கான கரோனா நிவாரண நிதி, பொருள்கள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அவரிடம் தகராறு செய்துள்ளனர். மேலும், இவர் மீது சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்ததாகவும் தெரிகிறது. இது தொடர்பாக, விசாரிப்பதற்காக வந்த காவலர்கள், மாணிக்க செல்வகுமாரை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கினர். இதனை புகார் கொடுத்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர்.
இதுகுறித்து மாணிக்க செல்வகுமார் தரப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். இதற்கிடையில் ஆசிரியரை காவலர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க...தனிமைப்படுத்தப்படும் வார்டை ஆய்வு செய்த காவல் ஆணையர்!