ETV Bharat / state

பக்கத்து வீட்டு பெண் பாலியல் வன்கொடுமை; பொறியியல் பட்டதாரியின் நாடகம் அம்பலமானது எப்படி?

கன்னியாகுமரி மாவட்டத்தில் பக்கத்து வீட்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, உடலை சிதைத்து நாடகமாடிய பொறியியல் பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருவட்டார்
திருவட்டார்
author img

By

Published : Feb 18, 2023, 7:23 AM IST

கன்னியாகுமரி: திருவட்டார் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 47 வயது பெண்மணி. இவரது பக்கத்து வீட்டிலிருந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் சம்பந்தப்பட்ட பெண்ணுக்குப் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண் தனது குடும்பத்தினரிடம் கூறிய நிலையில், பெண்ணின் தாய், உள்ளூர் பிரமுகர்கள் அந்த இளைஞரைக் கண்டித்துள்ளனர்.

இதனால், அந்த இளைஞர் பெண்மணி மீது கடும் ஆத்திரத்திலிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி பெண்மணி மட்டும் வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த அந்த இளைஞர் பெண்மணி வீட்டின் பின்புறம் வழியாக கள்ளத்தனமாக நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், பெண்ணின் கழுத்து, தலை, மார்பு பகுதிகளில் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதையும் படிங்க: Tenkasi bus accident: தமிழ்நாடு - கேரள எல்லையில் பேருந்து விபத்து - 25 பயணிகள் படுகாயம்!

மாலை நேரத்தில் வீடு திரும்பிய குடும்பத்தினர் பெண்ணின் நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோடு, சம்பவம் தொடர்பாக திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், பெண்ணின் குடும்பத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் அந்த கொடூர மனம் கொண்ட பக்கத்து வீட்டு இளைஞரை அழைத்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், 'பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தவறை மறைக்கவே பெண்ணை கொடூரமாகத் தாக்கியதாகவும்' கூறியதாகத் தெரிகிறது. இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால். கொலை வழக்காகப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: CCTV: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை விவகாரம் - 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.