வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலம் கொரோனா வைரஸ் பல்வேறு பகுதிகளில் தென்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், வெளிநாடு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் வந்து செல்லும் கேரள தொல்லியல் துறையின் கீழ் உள்ள முக்கிய மையங்கள் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
அதையொட்டி, பத்மநாபபுரம் அரண்மனையும் இன்று முதல் மூடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கொரோனை எதிர்க்க தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள குறும்படம்!