கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இராமன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் கலந்துகொண்டு மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக சிறப்புரையாற்றினார்.
பின்னர், பள்ளி மாணவ மாணவிகளின் கிராமிய நடனம், காமராஜரை குறித்த கிராமிய வில்லிசை, சத்தான உணவு குறித்த விழிப்புணர்வு நாடகம், உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, பல்வேறு போட்டிகள், தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் ரொக்கப்பணமும் வசந்தகுமார் எம்பி வழங்கினார். அதுமட்டுமின்றி, மாணவர்களின் பயன்பாட்டிற்காக பள்ளிக்கு தொலைக்காட்சிப்பெட்டியும் வழங்கினார்.
மேலும், ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு தேர்வுகளில் மாணவர்களை நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெறவைத்த ஆசிரியர்களுக்கு ரொக்கப்பணத்தையும் பரிசாக வழங்கினார்.
இதையும் படிங்க: மீனவர்களை மீட்டு தாருங்கள்: வசந்தகுமார் எம்.பி. கோரிக்கை