இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் அழிந்துவிட்டது. மக்களும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் பணியாற்றி வந்த ஊழியர்கள் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார்கள்.
இதனால் தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. எங்கே இருந்து வந்தார்களோ? அந்த மாநிலத்திற்கும் அதிக சுமை ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 251 பேர் உயிரிழந்தனர். இதில், சென்னையில் மட்டும் 197 பேர் உயிரிழந்தனர். கரோனாவை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறை உதவி செய்கின்றனர். அதற்கு மேலாக தமிழ்நாடு சிறப்பு காவல் அலுவலர்களை கொண்டு வரவேண்டும். சென்னையில் உள்ள ராணுவ வீரர்களையும் பயன்படுத்த வேண்டும். பெரிய சந்தைகளில், மீன் மார்க்கெட்டில் இவர்களை பணியில் நிறுத்தவேண்டும்.
இந்த மார்க்கெட்டுகளில் எவ்வளவு பேர் உள்ளே இருந்து பொருள்களை வாங்க முடியுமோ? அவர்களை மட்டுமே உள்ளே அனுப்ப வேண்டும். அவர்கள் வாங்கிய பிறகு மற்றொரு வாசல் வழியாக வெளியே அனுப்பி தொடர்ந்து கண்காணித்தால் கரோனாவை ஒழிக்க உதவியாக இருக்கும். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அவதூறு கருத்து: வரதராஜன் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு