கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள சிதறால் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ தஜ் விஜயன் (31). இவர் முதுகலை அறிவியல் பட்டம் பெற்று சுயதொழில் செய்துவருகிறார்.
இந்நிலையில், நம் நாட்டின் உணவு, கலாசாரம் ஆகியவற்றின் பன்முகத்தன்மையை சீர்படுத்தவும், உடற்பயிற்சி, ஆரோக்கியம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான சுமார் 4000 கி.மீ. தொலைவை 30 நாள்களில் மிதிவண்டியில் கடந்து சாதனை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விழிப்புணர்வு மிதிவண்டி பயணத்தை காவல் துறை அலுவலர் மைதிலி சுந்தரம் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் ஸ்ரீ தஜ் விஜயனின் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு அவருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்து வழியனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க:
ஒற்றைக்காலில் சைக்கிள் பயணம்... கன்னியாகுமரி முதல் சென்னை வரை...