ETV Bharat / state

கட்டுப்பாடுகளுடன் நடைபெறவுள்ள கந்தசஷ்டி விழா - kanyakumari kanda sashti vizha permission

கன்னியாகுமரி: கந்தசஷ்டி விழாவினை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

kanyakumari kanda sashti vizha permission

author img

By

Published : Nov 19, 2020, 7:33 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் கந்தசஷ்டி விழா நடத்த அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் பாரம்பரிய முறைப்படி கந்தசஷ்டி விழா நடத்த அனுமதிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் இந்து அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா காலம் என்பதால் கந்தசஷ்டி விழாவில் சுவாமி, சூரன் ஆயக்கால் சுமப்பவர், பூசாரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி கிடையாது. பொதுமக்கள் விழாவினை தங்கள் இல்லங்களிலிருந்து காணும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கும், அர்ச்சனை செய்வதற்கும் அனுமதி கிடையாது. கூட்டம் கூடுவதால் தொற்று பெருந்தொற்றாக மாற்றக்கூடும். எனவே பொதுமக்கள் அரசின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க... சூரசம்ஹார ஆலோசனைக் கூட்டம்: சுமுக முடிவு எட்டப்படாமல் வெளியேறிய அலுவலர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.