ETV Bharat / state

பதினைந்து நாள்களாகியும் ஊர் திரும்பாத மீனவர்கள்: உறவினர்கள் கண்ணீர் மல்க மனு! - kanyakumari fishermen missing issue

கன்னியாகுமரி: கேரளாவிலிருந்து நடுக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 16 மீனவர்கள் ஊர் திரும்பாததால், அவர்களை கண்டுபிடித்து தர வேண்டி உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பதினைந்து நாள்களாகியும் ஊர்திரும்பாத மீனவர்கள்

author img

By

Published : May 23, 2021, 3:37 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், கடற்கரை கிராமங்களான கொட்டில்பாடு, குளச்சல், கடியப்பட்டணம், முட்டம், கன்னியாகுமரி, தக்கலை பகுதிகளைச் சேர்ந்த 12 மீனவர்களும், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களும், ஒரே படகில் கேரள மாநிலம், பெய்ப்பூர் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

பதினைந்து நாள்களாகியும் ஊர்திரும்பாத மீனவர்கள்
காணாமல்போன மீனவர்கள்
இவர்கள் 15 நாள்கள் ஆகியும் ஊர் திரும்பவில்லை. கடந்த வாரம் அரபிக்கடலில் உருவான டவ்தே புயலில் சிக்கி மீனவர்கள் ஆபத்தில் இருக்கக்கூடும் என்று காணமல்போன மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், மீனவர்களின் உறவினர்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து காணாமல் போன 16 மீனவர்களைக் கண்டுபிடித்து தர வேண்டுமென கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: மாயமான மீனவர்களைத் தேட விமானம், கப்பல் ரேடார் மூலம் மத்திய அரசு நேரடியாக ஈடுபட வேண்டும் - ஓ.எஸ்.மணியன்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.