ETV Bharat / state

நிவாரணம் வழங்க வலியுறுத்தி குமரி மீனவர்கள் உண்ணாவிரதம் - kanyakumari latest news

நாகர்கோவில்: உயிரிழந்த மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்காய்பட்டணத்தில் மீனவர்கள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

fishermen protest
fishermen protest
author img

By

Published : Aug 9, 2020, 1:19 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில் தூத்தூர் மண்டல மீனவர் அமைப்பு, சின்னத்துறை மீன்பிடி தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று (ஆக.08) மாலை திடீர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில், தேங்காய்பட்டணம் முகத்துவாரத்தை சீரமைத்து மணல் மேடுகளை அகற்ற வேண்டும், அப்பகுதியில் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரவேண்டும், இறந்த மீனவர்களுக்கு உடனடியாக தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.

kanyakumari-fishermen-goes-on-hunger-strike-protest
உண்ணாவிரத போராட்டம்
இச்சம்பவம் அறிந்த தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் அங்கு சென்று மீனவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அரசின் சார்பில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் மணல் திட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், இதர கோரிக்கைகளையும் உடனடியாக செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவர்கள் மாயம்: தேடும் பணி தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.