ETV Bharat / state

கரோனா ஊரடங்கு விழிப்புணர்வு நடை பயணத்தை தொடங்கி வைத்த கன்னியாகுமரி டிஎஸ்பி

author img

By

Published : Jul 5, 2020, 11:12 AM IST

கன்னியாகுமரி : காவல் துறை சார்பில், கரோனா ஊரடங்கு விழிப்புணர்வு நடை பயணத்தை காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பிரச்சாரம்
விழிப்புணர்வு பிரச்சாரம்

கரோனா தொற்று உலகம் முழுவதும் கட்டுக்கடங்காமல் பரவி, லட்சக்கணக்கானோரை பலி கொண்டு வருகிறது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரம்பத்தில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், வெளி நாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து மாவட்டத்திற்கு வந்தவர்கள் மூலம் கரோனா தொற்று எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது.

நேற்று (ஜூலை மூன்று) ஒரே நாளில் வடசேரி சந்தை வியாபாரிகள் உட்பட 51 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தீவிரமடைந்து வரும் கரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், பொது மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழ்நாடு முழுவதும் இம்மாத ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் கரோனா முழு ஊரடங்கு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டக் காவல் துறை சார்பில் பேரூராட்சி, சுகாதாரத் துறை பணியாளர்கள் ஆகியோரைக் கொண்டு மாதவபுரம் சந்திப்பிலிருந்து கன்னியாகுமரி காவல் நிலையம் வரை விழிப்புணர்வு பரப்புரை பேரணி நடை பயணம் நடைபெற்றது.

விழிப்புணர்வு பிரச்சாரம்
கரோனா முழு ஊரடங்கு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
இந்தப் பேரணியை காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆய்வாளர் ஆவுடையப்பன், கன்னியாகுமரி அரசு மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்பேரணியில் ஊரடங்கு காலக் கட்டத்தில் கட்டாயம் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருந்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், முகக் கவசம் அணிதல், கைகளை கழுவுதல் ஆகியவை குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.