ETV Bharat / state

நடைபயணம் மேற்கொண்டு மக்களிடம் கோரிக்கைகளைப் பெற்ற திமுக எம்எல்ஏ

author img

By

Published : Nov 29, 2020, 4:42 PM IST

மக்களுடன் கலந்துரையாடுவதற்காக திமுக எம்எல்ஏ ஆஸ்டின் சட்டப்பேரவை உறுப்பினருடன் தேநீர் என்ற நடைபயணத்தைத் தொடங்கி, அதன் மூலம் மக்கள் கோரிக்கைகளை சேகரித்து வருகிறார்.

kanyakumari DMK MLA austin  received demands from the people

கன்னியா குமரி: திமுகவைச் சேர்ந்த கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆஸ்டின் தனது தொகுதிக்கு உட்பட்ட இலந்தையடிதட்டு அம்மன் கோயிலில் இருந்து நடைபயணமாக சென்று மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியை தொடங்கினார். இலந்தையடிதட்டு, வைகுண்டபதி, காற்றாடி தட்டு, கேசவன்புதூர், நெசவாளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களிடம் கோரிக்கைகளை பெற்றுக் கொண்டார்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த நான்கரை ஆண்டுகளில் தன்னுடைய 75% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். தொகுதி முழுவதும் ரூ. 500 கோடி மதிப்பிலான பணிகளை நிறைவேற்றியுள்ளேன். சில பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் வருவதற்கு முன்பாகவே, அவரிடம் அளித்த 95 கோரிக்கைகளில் முதல் கோரிக்கை அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்டம் தான்.

2016ஆம் ஆண்டில் பணிகள் தொடங்கி முடிவடைந்து விட்டாலும், மின்சாரம் வழங்காததால் இன்னமும் அவை செயல்பாட்டிற்கு வரவில்லை. அவற்றை விரைந்து முடிக்க தற்போது வலியுறுத்தி வருகிறேன்.

மக்களிடம் கலந்துரையாடுவதற்காக இன்று முதல் மக்களை சந்திக்க பயணத்தை தொடங்கியுள்ளேன். இதன்படி காலை 7 மணிக்கு ஒவ்வொரு பகுதியிலும் சட்டப்பேரவை உறுப்பினருடன் தேநீர் என்ற அடிப்படையில் தேநீர் கடைகளில் தேநீர் அருந்திக் கொண்டே மக்கள் குறைகளை கேட்கிறேன்.

தெரு தெருவாக நடந்து சென்று காலை 11 மணிவரை மக்களிடம் குறைகளை கேட்க உள்ளேன். பொங்கல் பண்டிகைக்கு இந்த பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளேன்.

வாரத்திற்கு ஐந்து நாள்கள் இந்தப் பயணம் நடைபெறும். இந்த பயணம் பற்றி ஒரு நாள் முன்னதாக அப்பகுதி மக்களுக்கு துண்டு பிரசுரம் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.

மேலும் பேசிய அவர், புத்தன் அணை திட்டத்திற்காக புத்தேரி பாலம் முதல் தடிக்காரன்கோணம் வரை தோண்டப்பட்டது. இந்த சாலையில் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே இந்த சாலையில் பணியை நிறைவு செய்து ஒப்படைக்க வலியுறுத்தியும், அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்க வலியுறுத்தியும் வருகிறது வரும் டிசம்பர் 2ஆம் தேதி நாகர்கோவிலில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அடிப்படை வசதிகள் கேட்டு ஆட்சியரை முற்றுகையிட்ட மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.