கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அதிக வேகமாக ஓட்டுதல், குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுதல் போன்ற பல்வேறு விதிமீறல்கள்ல் குமரியில் 65 சதவீத உயிரிழப்புகள் ஏற்படுகிறன.
இந்நிலையில், வாகன போக்குவரத்தை கண்காணிக்க உதவும் 35 உடல் கேமராக்கள் (காவலர் தோள்பட்டையில் பொருத்தப்பட்ட கண்காணிக்க உதவும் புகைப்பட கருவி) அறிமுகம் செய்யப்படும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், காவல் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் பிரசாந்த் வடநேரே கேமராவினை அறிமுகப்படுத்தி போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியின் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், "இந்த கேமராக்கள் போக்குவரத்து ஆய்வாளர், உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர்களின் தோள்பட்டையில் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம், மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள், தலைக்கவசம் அணியாமல் பைக்கில் பயணம் செய்பவர்கள் உள்பட போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை அடையாளம் கண்டு அபராதம் விதிக்க ஏதுவாக இருக்கும். சுமார் ஐந்து மீட்டர் தொலைவில் வரும் வாகனங்களைக் கூட இந்த கேமரா படம் பிடிக்கும் திறன் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் 2020 - எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?