இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக அரசு வந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுவருகிறது. உலகளவில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள்கூட இன்றளவும் வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்தி வருகின்றன.
இதில் எந்தவித மோசடியும் நடைபெற முடியாது. எனவே இந்திய நாட்டில் ஜனநாயகத்தை காத்திட வாக்குப்பதிவு இயந்திரத்தை தவிர்த்துவிட்டு, பொதுத் தேர்தல்களில் முன்பு இருந்ததுபோல் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கன்னியாகுமரி காங்கிரஸ் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் - கன்னியாகுமரி வாக்குச்சீட்டு
கன்னியாகுமரி: குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பொதுத் தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.