ETV Bharat / state

பாஜக திட்டங்களை செயல்படுத்திய காங்கிரஸ் - ஆச்சரியத்தில் பொது மக்கள்! - Congress implemented ayushman bharat

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் வேற்றுமையில் ஒன்றுமை என்ற அடிப்படையில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தின் கீழ் காங்கிரஸ் சார்பில் பதிவு மற்றும் அடையாள அட்டை வழங்கும் முகாம் இன்று தொடங்கியது.

kanyakumari-congress-implemented-ayushman-bharat
பாஜக திட்டங்களை செயல்படுத்திய காங்கிரஸ் : ஆச்சரியத்தில் பொது மக்கள்!
author img

By

Published : Jul 7, 2023, 4:29 PM IST

Updated : Jul 7, 2023, 6:30 PM IST

பாஜக திட்டங்களை செயல்படுத்திய காங்கிரஸ் : ஆச்சரியத்தில் பொது மக்கள்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், ஏழை மக்கள் மருத்துவ வசதி பெற மகளிர் காங்கிரஸ் சார்பில் பதிவு மற்றும் அடையாள அட்டை வழங்கும் முகாம் இன்று தொடங்கியது.

ஏழை எளிய மக்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் 5 லட்சம் ரூபாய் வரை, இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் ஆயுஷ் மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் மூலம் பொதுமக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்தத் திட்டத்தில் கூரை வீடு இல்லாதவர்கள், பழங்குடி மக்கள், ஊனமுற்றவர்கள், நிலம் அற்றவர்கள், கூலி வேலை செய்பவர்கள் போன்றவர்கள் இந்த அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும்; இந்தத் திட்டத்தில் விபத்து மற்றும் 21 வகையான அவசரகால சிகிச்சைகளுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:Rahul Gandhi: ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு மீதான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

இந்த அட்டையைப் பயன்படுத்தி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறலாம் எனவும்; மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்தியாவில் பொது மக்கள் நோயினால் கஷ்டப்படும் காலத்தில் போதிய வசதி இல்லாத காரணத்தால் உரிய சிகிச்சை கிடைக்காமல் பலர் கஷ்டப்படும் சூழ்நிலை நிலவுகிறது. சிகிச்சைக்காக கடன் வாங்கும் சூழ்நிலையும் நிலவுகிறது. அவர்களுக்கு உதவிடும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தில் சேரத் தகுதியுள்ள நபர்கள் இந்தக் கடன் அட்டைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் பொது மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில், திமுக அரசு பின் தங்கி உள்ளதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. குறிப்பாக, ஆயுஷ் மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற மத்திய அரசின் திட்டம் பொது மக்களுக்குத் தெரியாமலே இருந்து வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் மருத்துவக் காப்பீடு அட்டை வழங்குவதற்கான நடவடிக்கையை குமரி மாவட்ட நாகர்கோவில் மகளிர் காங்கிரஸ் அணியினர் முகாம்களை நடத்த திட்டமிடபட்டு இன்று முகாம் தொடங்கப்பட்டது.

இந்த முகாம்களின் மூலம் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் கீழ் ஏழைகள் பயன்பெறும் வகையில் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பதிவு செய்தவர்களுக்கு மூன்று தினங்களில் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். பாஜக அரசின் திட்டங்களை பொது மக்கள் மத்தியில் காங்கிரஸ்காரர்கள் எடுத்துக்கொண்டு செல்வது பொது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் அதேவேளையில் வரவேற்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:Mekedatu: கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது அறிவிப்பு; கலக்கத்தில் தமிழக விவசாயிகள்!

Last Updated : Jul 7, 2023, 6:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.