ETV Bharat / state

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - குமரி ஆட்சியர் அறிவுறுத்தல்! - kannyakumari weather news

கன்னியாகுமரி: புயல் எச்சரிக்கைக் காரணமாக அடுத்த அறிவிப்பு வரும்வரை குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் குமரி மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக மழை அளவு அதிகரித்துள்ளது எனவும் குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே தெரிவித்துள்ளார்.

kannyakumari collector prasath mu vadanery
author img

By

Published : Nov 1, 2019, 7:22 AM IST

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. கடந்த 25ஆம் தேதி உருவாகிய 'கியார்' புயலால் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் கரைதிரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு குமரி கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று 'மகா' புயல் உருவாகியுள்ளது. அரபிக்கடலில் மையம் கொண்ட இந்தப் புயலால் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுவித்துள்ளது.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய குமரி மாவட்ட ஆட்சியர்,"கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு மழைப் பொழிந்துள்ளது. சராசரியாக ஆண்டிற்கு 526 மி.மீ. மழைப் பொழியும் என்ற நிலையில் தற்போதுவரை 400மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. இது ஒரு ஆண்டில் பொழியும் மழையில் 77 விழுக்காடு அதிகமாகும்.

குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே

அணைகள் அனைத்தும் சீரான முறையில் நிரம்பிவருகிறது. அதிக மழை, நீர்வரத்து காரணமாக பெருஞ்சாணி அணையிலிருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், புயல் எச்சரிக்கை திரும்பப்பெறாத நிலையில் அதுகுறித்த அடுத்த அறிவிப்பு வரும்வரை குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: தீயணைப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கிய முதலமைச்சருக்கு நன்றி: டிஜிபி காந்திராஜன்!

Intro:கன்னியாகுமரி: புயல் எச்சரிக்கை காரணமாக அடுத்த அறிவிப்பு வரும் வரை குமரி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு போகவேண்டாம் எனவும், குமரி மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக மழை அதிக அளவு பொழிந்துள்ளது என குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

Body:குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த 25 ம் தேதி உருவாகிய கியார் புயலால் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்ற மீனவர்கள் கரைதிரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் குமரி கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று மகா என்ற புயலாக உருவாகியுள்ளது. அரபிக்கடலில் மையம் கொண்ட இந்த புயலால் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுவித்தது.அதன் படி குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.
இது குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக மழை அதிக அளவு பொழிந்துள்ளது. சராசரியாக ஆண்டிற்கு 526 மி.மீ மழை பொழியும் என்ற நிலையில் தற்போது இதுவரை 400 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது ஒரு ஆண்டில் பொழியும் மழையில் 77 % மாகும்.
மேலும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதால் அணைகள் அனைத்தும் சீரான முறையில் நிரம்பி வருகிறது. அதிக மழை நீர் வரத்து காரணமாக பெருஞ்சாணி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. மேலும் புயல் எச்சரிக்கை திரும்ப பெறாத நிலையில் புயல் எச்சரிக்கை குறித்த அடுத்த அறிவிப்பு வரும் வரை குமரி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் போகவேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.