ETV Bharat / state

பெண் மருத்துவரிடம் அத்துமீறிய நடத்துனர் - Kanyakumari City bus conductor apprehended sexual harassment

கன்னியாகுமரி : அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவரிடம் நடத்துனர் அத்துமீறிய செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

kanyakumari city bus conductor held for sexual harassment
kanyakumari city bus conductor held for sexual harassment
author img

By

Published : Feb 6, 2020, 9:21 AM IST

திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு சென்ற அரசுப் பேருந்தில், குமரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவர் பயணம் செய்துள்ளார்.

பேருந்து பாறசாலை அருகே வந்துகொண்டிருந்தபோது நடத்துனர், பெண் மருத்துவரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிட்டவே பேருந்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பேருந்தை அருகில் உள்ள காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லுமாறு ஓட்டுநரிடம் பயணிகள் கூறினர்.

நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காவல் துறையினர்

அதன்பேரில், ஓட்டுநர் பேருந்தை உடனடியாகப் பாறசாலை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றார். அங்கு பெண் மருத்துவர் நடத்துனர் தன்னிடம் அத்துமீறியது குறித்து காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தார். இதனடிப்படையில், காவல் துறையினர் நடத்துனரைப் பிடித்து விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க : 'மாஸ்டர்' படப்பிடிப்பு நிறுத்தம் - வருமான வரித்துறையினரின் பிடியில் விஜய்

Intro:கன்னியாகுமரி திருவனந்தபுரத்தில் இருந்து குமரி வந்த அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெண் டாக்டரிடம் கண்டக்டர் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. பாறசாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Body:tn_knk_03_conductor_sexual_harassment_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி திருவனந்தபுரத்தில் இருந்து குமரி வந்த அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெண் டாக்டரிடம் கண்டக்டர் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. பாறசாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு இன்று அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் குமரிமாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் மருத்துவராக பணி செய்யும் பெண் மருத்துவர் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அரசு பேருந்து பாறசாலை அருகில் வந்துகொண்டிருந்தபோது கண்டக்டர் பெண் மருத்துவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மருத்துவர் கூச்சலிட்டார். இதனால் பேருந்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகள் பேருந்தை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.
பேருந்து ஓட்டுனர் பஸ்சை உடனடியாக பாறசாலை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு பெண் மருத்துவர் கண்டக்டர் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் கண்டக்டரை பிடித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பேருந்தில் பயணம் செய்த பெண் அரசு மருத்துவரை கண்டக்டர் சில்மிஷம் செய்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.