கன்னியாகுமரி: நாகர்கோவில் பெரியவிளை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் காந்தி. இந்நிலையில், பீச் ரோடு சந்திப்பு அருகே இன்று (ஜன.7) சாலையோரமாகப் போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தனது ஆட்டோவை நிறுத்தி இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த போக்குவரத்து போலீசார் ஆட்டோவுக்கு ரூ.2,000 அபராதம் விதித்துள்ளனர்.
எவ்வித தவறும் செய்யாத நிலையில் தனது வருவாய்க்கு மிஞ்சிய தொகையை அபராதமாக விதித்ததால் வேதனை அடைந்த காந்தி, தனது மனைவி குழந்தைகளோடு பீச் ரோடு சந்திப்புக்குச் சென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், காந்தியையும் குடும்பத்தினரையும் தீக்குளிக்க விடாமல் தடுத்து பத்திரமாக மீட்டனர்.
இதனையடுத்து குடும்பத்துடன் சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக, அவரை அப்பகுதி மக்கள் சமாதானம் பேசி வீட்டிற்கு அனுப்பினர். ஆட்டோவுக்கு ரூ.2,000 அபராதம் விதித்ததால், குடும்பத்தோடு ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நிற்காமல் சென்ற அரசு பேருந்தை சுத்தியல் காட்டி எச்சரித்த பெண் வீடியோ!