தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்காக காவலர்கள் அழைத்துச் சென்றனர். பின் அவர்களை கோவில்பட்டி கிளை சிறைச்சாலையில் அடைத்தனர். அங்கு தந்தையும் மகனும் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தனர்.
விசாரணையின் போது காவலர்கள் அடித்து துன்புறுத்தியதால் தந்தை, மகன் இருவரும் இறந்து விட்டனர் என்று குற்றம்சாட்டப்பட்டது.
இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வியாபாரிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் மாவட்ட காவல் துறையினருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், 'கரோனா காலத்தில் பொதுமக்கள் மீது காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது.
ஊரடங்கு விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமை காட்ட வேண்டிய அவசியம் கிடையாது. தேவையின்றி வழக்குப்பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. இதை மனதில் வைத்து காவலர்கள் செயல்பட வேண்டும்' என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
'பொதுமக்களிடம் காவல்துறையினர் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்' - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் - கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
குமரி: சிறையில் தந்தை, மகன் இறந்த சம்பவத்தின் எதிரொலியாக பொதுமக்களிடம் காவல் துறையினர் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கன்னியாகுமரி காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.