குமரி மாவட்டம் குளச்சலில் தண்டி யாத்திரையின் 90ஆம் ஆண்டு தினத்தையொட்டி, இன்று மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் குளச்சலிலிருந்து இரணியல்வரை ஒன்பது கி.மீ தூரம் பாத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு குளச்சல் காவல் துறையினர் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் இளைஞர் காங்கிரஸினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் துறையின் தடையை மீறி பாத யாத்திரையை தொடங்கினர். அதனால் குளைச்சலில் ஏராளமான காவல் துறையினர் அவர்களை தடுத்தி நிறுத்த முற்பட்டனர்.
அதனால் அவர்கள் சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். அதனைத்தொடர்ந்து காவல் துறையினருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் காவல் துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தி, குண்டு கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். அதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதனால் அங்கு பரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா - பாஜகவினர் பாதயாத்திரை!