ETV Bharat / state

கடல் சீற்றத்துடன் காணப்படும் கன்னியாகுமரி

கன்னியாகுமரி : கடலில் வழக்கத்துக்கு மாறாக அலைகள் ஆக்ரோஷத்துடன் எழுவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

author img

By

Published : Jun 17, 2020, 1:25 PM IST

கன்னியாகுமரி
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வாரம் கடும் மழை பெய்து வந்தநிலையில் சில தினங்களாக குமரி கடல் பகுதியில் அதிக காற்று வீசி வருகிறது.

இதனால் நேற்று முன்தினம் மாவட்ட மீன்வளத்துறையின் எச்சரிக்கையால் சின்னமுட்டம் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச்செல்லவில்லை.

இந்நிலையில் கன்னியாகுமரி கடல் நேற்று இரவு முதல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி கடலில் வழக்கத்திற்கு மாறாக 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு தொடர்ச்சியான அலைகள் உயரமாக எழும்பி பாறைகளில் மோதி அதிக ஆக்ரோஷத்துடன் கரையை வந்து தாக்குகிறது.

இதனால் முக்கடல் சங்கமம் பகுதியிலும் கடல் அலைகள் மேலெழும்பி அதிக சீற்றத்துடன் காணப்படுகின்றன. இந்த கடல் சீற்றத்தால் வாவத்துறை நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதையும் படிங்க: முருகன் சிறையில் 17ஆவது நாளாக உண்ணாவிரதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.