பெங்களூரில் ஆசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது. இதில் 48 நாடுகளைச் சேர்ந்த 300 பேர் பங்கேற்றனர். இந்தப் போட்டிகளில் ஆண்களுக்கான பெர்முடா பீச் மாடல் ஆணழகன் பிட்நெஸ் பிரிவில், குமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் தங்கப் பதக்கத்தை வென்றார்.
இந்நிலையில், இன்று பெங்களூரிலிருந்து நாகர்கோவில் வந்த அவருக்கு சக விளையாட்டு வீரர்களும் ஊர் மக்களும் மேளதாளம், அதிர்வேட்டு ஆகியவை முழங்க மாலை அணிவித்து உற்சாகமான வரவேற்பளித்தனர்.
அப்போது கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கடந்த இரண்டு ஆண்டுகளில் கடுமையான பயிற்சி செய்ததால் ஆசியன் போட்டியில் வெற்றிபெற்றேன். இதற்கு என் பயிற்சியாளரும் என் பெற்றோர்களும்தான் காரணம். ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்று நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே என் லட்சியம்” என்றார்.
இதையும் படிங்க: ஆய்வில் எழுந்த சந்தேகம்... பைக்கில் 120 லிட்டர் சாராயம்... கடத்தல்காரரை குண்டுக்கட்டாக தூக்கிய காவலர்கள்!