ETV Bharat / state

மசாஜ் சென்டரின் பெயரை வைத்து பாலியல் தொழில் - 3 பேரிடம் விசாரணை - கன்னியாகுமரி மசாஜ் மைய விபச்சாரம்

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் மசாஜ் மையம் என்ற பெயரில், பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட அம்மையத்தின் உரிமையாளரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Massage center prostitution Kanniyakumari Massage center prostitution prostitution மசாஜ் மைய விபச்சாரம் கன்னியாகுமரி மசாஜ் மைய விபச்சாரம் விபச்சாரம்
Massage center prostitution
author img

By

Published : Mar 10, 2020, 4:00 PM IST

Updated : Mar 10, 2020, 5:48 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மசாஜ் மையம், ஸ்பா என்ற பெயர்களில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்கு அதிகளவில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதனடிப்படையில், மசாஜ் மையங்களை ரகசியமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, நாகர்கோவில் கடற்கரை சாலை சந்திப்பில் பிளாக் பெர்ரி ராயல் ஸ்பா மசாஜ் என்ற மையத்தில், பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் ஜவஹர் தலைமையிலான காவல் துறையினர், அந்த மசாஜ் மையத்திற்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.

அதில், பாலியல் தொழிலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த மூன்று பெண்களை அரசு காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து, கோட்டாறு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மசாஜ் மையத்தின் உரிமையாளர் வழக்கறிஞர் விஜயானந்தை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மசாஜ் சென்டரின் பெயரை வைத்து பாலியல் தொழில்

மேலும் நாகர்கோவிலில் குறுகிய காலத்தில் இரண்டு மசாஜ் மையங்களில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மசாஜ் மையங்களை காவல் துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பெரம்பலூர் தனியார் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி

Last Updated : Mar 10, 2020, 5:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.