கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் செயல்பட்டுவரும் பிரபல நகை கடையான சிலங்கா நகை கடையில் நேற்று நள்ளிரவு கடையின் பின்புறம் வழியாக தலைக்கவசம் அணிந்து உள்ளே வந்த ஒருவர் கடைக்குள் புகுந்து 140 சவரன் தங்க நகைக்கு மேல் கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இதுகுறித்து, கடை உரிமையாளர் கிறிஸ்டோபர் கொடுத்த புகாரின் பேரில் தக்கலை காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் மார்த்தாண்டம் காவல்துறையினர் மோப்ப நாய் ஏஞ்சல் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:
சென்னையில் கஞ்சா விற்பனை - 4 பேர் கைது, ஒருவருக்கு வலைவீச்சு!