ETV Bharat / state

'பொருட்களின் தரம், காலாவதியை பார்த்து வாங்குங்கள்..!' - ஆட்சியர் அறிவுரை - consumer'

நாகர்கோயில்: "கடைகளில் இருந்து ஒரு பொருளை வாங்கும் முன்பு அதன் தரம், காலாவதியான தேதி ஆகியவற்றை பார்த்து நுகர்வோர் வாங்கவேண்டும்" என்று, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

குமாரி ஆட்சியர்
author img

By

Published : Jun 7, 2019, 5:29 PM IST

உணவு பாதுகாப்பு மற்றும் உணவு பாதுகாப்பு மருத்துவ நிர்வாகத் துறை சார்பில் உலக உணவு பாதுகாப்பு தினம் கன்னியாகுமரி, கொட்டாரத்தில் உள்ள செவிலியர் மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவீன் ரகு ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு குறித்து நடைப்பெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னர் ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடைகளில் இருந்து ஒரு பொருளை வாங்கும் முன்பு அது எங்கு தயாரானது, அதன் தரம், காலாவதியான தேதி ஆகியவற்றை பார்த்து நுகர்வோர் வாங்க வேண்டும். இவ்வாறு பொருட்களை கேட்டு வாங்கினால், தயாரிக்கும் நிறுவனங்களும் இன்னும் கூடுதல் கவனத்தோடு இருக்கும். தற்போது அடிக்கடி ஓட்டலில் சென்று சாப்பிடும் நிலை உள்ளது. அங்கு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதில்லை. இதை அரசு அலுவலர்கள் தொடர்ந்து கவனிக்க முடியாது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள் விழிப்போடு நடந்துகொள்ள வேண்டும்" என்றார்.

Intro:உணவு பாதுகாப்பை கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற உணவு பாதுகாப்பு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே பேச்சு.

Body:உணவு பாதுகாப்பை கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற உணவு பாதுகாப்பு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே பேச்சு.

உணவு பாதுகாப்பை கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு பொதுமக்கள் அனைவருக்கும் உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பேசினார். உணவு பாதுகாப்பு மற்றும் உணவு பாதுகாப்பு மருத்துவ நிர்வாகத் துறை சார்பில் உலக உணவு பாதுகாப்பு தினம் கொட்டாரம் குமாரசாமி நல வாழ்வு மையத்தில் செவிலியர் பயிற்சி மைய நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் சுபலா வரவேற்றார். அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவீன் ரகு உறுதிமொழி வாசித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே பேசியதாவது:- உணவு பாதுகாப்பு நாம் அவருடைய பொறுப்பு .இதை நாம் முறையாக கடைபிடிக்க வேண்டும் .அரசு மட்டுமின்றி பொதுமக்களின் பொறுப்பும் உள்ளது. கடைகளில் இருந்து ஒரு பொருட் களை வாங்கும் முன்பு அது எங்கு தயாரானது தயாரிக்கப்பட்ட நாள் காலாவதியான தேதி ஆகியவற்றை பார்த்து வாங்கவேண்டும்
இப்படி நாம் பார்த்து வாங்கும் போது பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களும் பொருட்களைத் தயாரிக்கும். பாதுகாப்பான உணவு சத்தான உணவா என்று பொதுமக்கள் பார்த்து வாங்கவேண்டும். ஓட்டல்களில் முன்பக்கத் தோற்றம் நன்றாக இருந்தாலும் சமையல் அறை அசுத்தமாகவும் பாதுகாப்பின்றியியும் உள்ளது. பழைய காலங்களில் பொதுமக்கள் எப்போதாவதுதான் ஹோட்டலில் சென்று சாப்பிடும் வழக்கம் இருந்தது. தற்போது அடிக்கடி ஓட்டலில் சென்று சாப்பிடும் நிலை மாறி வருகிறது .வீட்டில் பெண்கள் சமையல் அறையில் சமையல் செய்யும்போது சுத்தமாகவும் சுகாதாரமாகவும் முறையில் இருந்தது .இதனால் உடல் நலமும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் கடைகளில் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதில்லை. இதை அரசும் அதிகாரிகளும் தொடர்ந்து கவனிக்க முடியாது. இதை பொதுமக்களும் மாணவர்களும் விழிப்புணர்வு காட்ட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார் .நிகழ்ச்சியில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ் கான் தொகுத்து வழங்கினார் .தொடர்ந்து உணவு பாதுகாப்பு குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.