ETV Bharat / state

CCTV:கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி - கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்

நான்கு வழிச்சாலையைக் கடக்க முயன்றபோது, இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்
கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்
author img

By

Published : Jun 23, 2022, 7:18 PM IST

கன்னியாகுமரி: அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (24). இவர் நேற்று (ஜூன் 22) கன்னியாகுமரியில் இருந்து முருகன்குன்றம் வழியாக அகஸ்தீஸ்வரம் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது முருகன்குன்றம் பகுதியில் நான்குவழிச்சாலையைக் கடக்க முயன்றபோது, கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த முருகன் என்பவரது கார், விஜய் பைக் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் விஜய் தூக்கி வீசப்பட்ட நிலையில் கால்முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் காட்சியில், இருசக்கர வாகனத்தின் மீது கார் வேகமாக மோதுவதும் அதில் விஜய் தூக்கி வீசப்படும் அதிர்ச்சியூட்டும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கன்னியாகுமரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'இப்படியும் சில மனிதர்கள்' - பணப்பிரச்னையால் தங்கையை கத்தியால் குத்திய அண்ணன்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.