இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாகவும், உயிர்த்தெழுந்த மூன்றாம் நாளை ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஈஸ்டர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை வரவேற்கும் விதமாக நேற்று மாலை முதல் கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர். மேலும் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் தின வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டனர்.