ETV Bharat / state

’கன்னியாகுமரி எங்கள் தொகுதி; நாங்கள்தான் போட்டியிடுவோம்’ - கே.எஸ்.அழகிரி - கன்னியாகுமரி தொகுதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அக்கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

leader
leader
author img

By

Published : Oct 26, 2020, 12:44 PM IST

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த வசந்தகுமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய, அக்கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி, ” மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு வழங்கப்படுவதற்கு ஆளுநர் தடையாக இருப்பதை ஏற்க முடியாது. மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்களும் தேர்வு எழுதும் வகையில் நீட் தேர்வு அமைய வேண்டும்.

12 ஆயிரம் ஆண்டு கால இந்திய வரலாற்றை மாற்றுவதற்கு பாஜக முயல்கிறது. இதற்காக அரசால் அமைக்கப்பட்ட கலாசாரக் குழுவில், இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே உள்ளனர். இந்த குழுவைக் கலைக்க வேண்டும். கரோனா பெருந்தொற்று மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இதை வைத்து தனியார் மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கின்றன. ஆனால், அதனை தடுக்க அரசு தவறிவிட்டதோடு, தொற்றை கட்டுப்படுத்துவதிலும் கோட்டை விட்டுவிட்டது.

’கன்னியாகுமரி எங்கள் தொகுதி’ - கே.எஸ்.அழகிரி

கன்னியாகுமரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும். இது எங்கள் தொகுதி. திருமாவளவன் இந்து மதத்திற்கு எதிராக பேசவில்லை. மதத்தில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டினால் தவறில்லை. நாங்கள் திருமாவளவனை ஆதரிக்கிறோம்“ என்றார். உடன் வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த், சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இருந்தனர்.

இதையும் படிங்க: 'முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே மக்களைக் காக்கும்' - பருவமழை குறித்து எச்சரித்த ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.