வளர்ந்து வரும் புதிய நவீன தொழில்நுட்பத்தோடு அவற்றை பயன்படுத்தி அப்பாவி பொதுமக்கள் ஏமாற்றப்படும் சம்பவங்களும் அதிக அளவில் உருவாகிக் கொண்டிருக்கின்றது.
வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடுவது, சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருப்பவர்களை மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக தினந்தோறும் காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதைக் கருத்தில் கொண்டு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை, சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் குறும்படத்தை வெளியிட்டுள்ளது.
இதில் காவல்துறையினரே நடித்துள்ளனர். இந்த குறும்படத்தை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் வெளியிட்டார். இந்த குறும்படத்தில், பொது மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்புள்ளது எனவும், அவற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வோடு இருப்பதற்கான அவசியத்தையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்தக் குறும்படத்தை இயக்கி நடித்த 25 காவல்துறையினருக்கு காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ்களை வழங்கி கொளரவித்தார். மேலும் எந்த ஒரு விஷயங்களுக்காகவும் பொதுமக்கள் காவல்துறையை தொடர்ப்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.